Freitag, Oktober 31, 2003

வெங்காயம் உங்கள் காதலி!

பசுமையான காய்கறிகள், பழங்கள், பருப்புகள் ஆகியவை புற்றுநோயை தடுப்பது மட்டுமல்ல, குணப்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். வெங்காயத்தை நாம் சாதாரணமாக நினைக்கிறோம். அவ்வப்போது வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. புற்றுநோய் வருவதற்கு காரணமான Carcinogen என்கிற மூலப் பொருளை எதிர்த்துப் போராடும் சக்தி வெங்காயத்திற்கு அபரிமிதமாக உண்டு. அதே போல பூண்டுக்கு கேன்சரை விரட்டும் சக்தி உண்டு. சோயா பீன்ஸ், சோயா மில்க், சோயா மாவு இவை எல்லாவற்றிலுமே கார்ஸினோஜினை நுழையாமல் தடுத்து நிறுத்தும் வல்லமை உள்ளது. மார்பகப் புற்று நோயுள்ளவர்களுக்கு முட்டைக் கோஸ், காலிஃப்ளவர் ஆகிய காய்கறிகளைச் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், நம்முடைய இந்தியன் ஸ்டைலில் மிக அதிகமாக வேக வைக்கக் கூடாது. வெளிநாட்டு உணவு போல பச்சையாகவோ அல்லது மிதமாக வேக வைப்பது சிறந்தது. பப்பாளிப்பழம், மாம்பழம், செர்ரி பழங்கள், பிளம்ஸ், தர்பூசனி ஆகிய பழங்களை ரெகுலராகச் சாப்பிடுவது கேன்சர் நோயாளிகளுக்கு நல்லது.

nantri-Kumutham