Montag, März 22, 2004

விளம்பரத் துறை

முதன் முதல் விளம்பர நோட்டீஸ் ஒட்டியவர்கள் ஜேர்மனியர்கள். 1466 ம் ஆண்டு தெருச்சுவர்களில் விளம்பர நோட்டீஸ்களை ஒட்டி விளம்பரத் துறையை ஆரம்பித்து வைத்தார்கள். 1786 ம் ஆண்டு வில்லியம் ரெய்லர் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்தவரால் விளம்பரக் கொம்பனி முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது. 1941 ஜுலை 1 ம் திகதி முதல் விளம்பரம் தொலைக் காட்சியில் காட்டப்பட்டது. காட்டப்பட்ட பொருள் கை மணிக்கூடு.

Samstag, März 20, 2004

நாய்தான் நமக்கு சீனியர்.

நாய்தான் அழகுப் போட்டியில் நமக்கு சீனியர்.
முதல் முதல் அழகுப் போட்டி நாய்களுக்கிடையில் 1859 ம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்றது.
அதற்குப் பிறகு 29 ஆண்டுகள் கழித்துத்தான் மனிதர்களுக்கிடையிலான அழகுப் போட்டி பற்றிய எண்ணம் யாருக்கோ வந்தது.
முதல் முதலாக மனிதர்களுக்கிடையிலான அழகுப் போட்டி 1988 இல் பெல்ஜியத்தில் நடைபெற்றது.

Freitag, März 19, 2004

புகையிலைக் காற்றை முதல் சுவாசமாக...

குழந்தை இறந்து விட்டதாக எண்ணி அதை அப்படியே கிடத்தி விட்டுப் போய் விட்டாள் மருத்துவத்தாதி.

நெருங்கிய உறவினரான மருத்துவர் - சுருட்டுப்பிரியர் - நம்பிக்கை இழக்காமல் குழந்தையின் வாயில் தனது வாயை வைத்து மூச்சைப் பலக்க ஊதினாரோ இல்லையோ குழந்தை பிழைத்துக் கொண்டது.

புகையிலைக் காற்றை முதல் சுவாசமாக இழுத்துப் பிறந்த அந்தக் குழந்தைதான் - பிக்காஸோ என்ற modernart மேதை.