
இவர் 1890ம் ஆண்டு மார்கழி மாதம் 1ந் திகதி Maine இல் பிறந்தார். 5.3.2004 இல் கின்னஸ் புத்தகத்தில் உலகில் அதி கூடிய வயதான ஆண் என்ற இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
109வயது வரை தான் பிறந்த நகரிலேயே வாழந்து வந்த இவர், அதன்பின் தனது மகன் வாழும் நியூயோர்க்கில் உள்ள Dewitt க்கு இடம் மாறியிருந்தார்.
அங்கு நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக தனது 114வது பிறந்தநாளுக்கு 12 நாட்கள் முன்பாக 19.11.2004 அன்று, நித்திரையிலேயே இறந்து விட்டார்.
தற்போதைய அதி கூடிய வயதான ஆண் மனிதர் Hermann Dörne. இவர் யேர்மனியின் Düsseldorf நகரில் வசிக்கிறார். இவருக்கு வயது 111.
ஆனால் இதே வயதில் இன்னும் 26 பெண்கள் வாழ்கிறார்கள் என நியூயோர்க்கைச் சேர்ந்த முதுமை பற்றிய ஆராய்ச்சிக்குழு அறியத் தந்துள்ளது.
2 Kommentare:
இவர் 1980ம் ஆண்டு மார்கழி மாதம் 1ந் திகதி Maine இல் பிறந்தார்
Typo! should have been 1880.
நன்றி சுரேஷ்
உடனடியாகத் தவறைச் சுட்டிக் காட்டியதற்கு.
அவர் பிறந்தது 1890 இல். திருத்தி விடுகிறேன்.
நட்புடன்
சந்திரவதனா
Kommentar veröffentlichen