Montag, Oktober 31, 2005

பழைய கணக்கீட்டு முறைகள்

தமிழர்களின் பழைய கணக்கீட்டு முறைகள் மிகவும் வியப்பானவை. மிகவும் நுட்பமான கணக்கீட்டு முறை அவர்களிடமிருந்தது. நுண்மையான அளவுகளிலிருந்து பெரிய அளவுகளை விரிவாய்க் கணக்கிட்டனர். அவர்களின் நீட்டல் அளவு முறை கீழே

8அணு - 1தேர்த்துகள்
8தேர்த்துகள் - 1பஞ்சிழை
8பஞ்சிழை - 1மயிர்
8மயிர் - 1நுண்மணல்
8நுண்மணல் - 1கடுகு
8கடுகு - 1நெல்
8நெல் - 1பெருவிரல்
12பெருவிரல் - 1சாண்
2சாண் - 1முழம்
4முழம் - 1கோல்(அ)பாகம்
500கோல் - 1கூப்பீடு

6 Kommentare:

Anonym hat gesagt…

அண்மையில் தமிழகத்திலிருந்து ஒருவர் லண்டன் வந்திருந்தார். அவர் தமிழில் கணிதம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ளதாகவும், சில சுவையான உதாரணங்களையும் கூறினார். அவரது ஆய்வு நூலாக வெளிவரும்போது பலரும் பயன் பெறலாம்.

மேலும் ஒரு தகவலைத் தேடியெடுத்துப் பின்னர் தருகிறேன்.

Anonym hat gesagt…

அண்மையில் தமிழகத்திலிருந்து ஒருவர் லண்டன் வந்திருந்தார். அவர் தமிழில் கணிதம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ளதாகவும், சில சுவையான உதாரணங்களையும் கூறினார். அவரது ஆய்வு நூலாக வெளிவரும்போது பலரும் பயன் பெறலாம்.

மேலும் ஒரு தகவலைத் தேடியெடுத்துப் பின்னர் தருகிறேன்.

நல்லடியார் hat gesagt…

8 அணுக்கள் = 1 தேர்த்துகள் என்பதை அறியும் போது அணுவை எப்படி எண்ணி இருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. மேலும் விரல் அளவு எல்லாக் கைகளுக்கும் பொருந்துமா?

வானத்தை பார்த்து மணி சொல்பவர்களல்லவா நம் மூதாதையர்? சுவாரஸ்யமான தகவலுக்கு நன்றி.

Chandravathanaa hat gesagt…

வணக்கம் பத்மனாபஐயர்
நீண்ட பொழுதுகளின் பின் உங்கள் கருத்துக் கிடைத்ததில் மகிழ்ச்சி.
ஆய்வு நூல் பற்றிய தகவலுக்கும் நன்றி.

நட்புடன்
சந்திரவதனா

Chandravathanaa hat gesagt…

நல்லடியார்
உங்கள் சந்தேகம் நியாயமானதுதான்.

எனது அம்மம்மா, அப்பாச்சி இருவருமே
வெயில் விறாந்தையிலும், முற்றத்திலும் விழும் அளவுகளை வைத்து நேரத்தையும்
வானத்தின் கோலத்தைப் பார்த்து மழை வெயில் வரப்போவதையும்
ஒரு நாளையின் வெயில், மப்பு, மழை, காற்று... போன்றவைகளை வைத்து
சில மாதங்களில் பின் வரப்போகும் ஒரு நாளின் கால நிலை பற்றியும் சரியாகச் சொல்வார்கள்.

யார் அடி போன்றவைகளைக் கூட எங்களைப் போல அடி மட்டம் வைத்து அளக்காமல், கை பிடித்து
முழத்தில் அளந்து, அதை வைத்து, இது இத்தனை யாராக இருக்கும் என்பார்கள். பிழைத்ததாக ஞாபகம் இல்லை.

Anonym hat gesagt…

Ammam "0" vaik kandup piditthavarkale Thamizarkal thaanaame.....Unmaiyaa?