உலக சரித்திரத்திலே மிக நீண்ட காலம் ஒரு வழக்கு பிரான்ஸ் நாட்டில் 15ம் நூற்றாண்டில் நடந்தது. குற்றவாளி யார் தெரியுமா? ஒரு சிறு பூச்சி.
ஐரோப்பாவில் முன்பு இப்படி விலங்குகளைக் குற்றவாளியாக்கி வழக்குகளைத் தொடர்வார்கள். பிரான்ஸ் நாட்டில் மட்டும் கி.பி 1120-1740க்குள் இப்படியான 49வழக்குகள் நடைபெற்றன. 1740இல் ஒரு பசு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப் பட்டது.
1457இல் லக்வேனி என்ற இடத்தில் ஒரு பெண் பன்றியும் அதன் ஆறு குட்டிகளும் ஒரு குழந்தையை உயிரோடு தின்று விட்டதாக வழக்கு நடந்தது. அதில் பெண் பன்றிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டது. அதன் குட்டிகள் ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்யப் பட்டன.
தகவல் - தினமுரசு.
Freitag, November 04, 2005
Abonnieren
Kommentare zum Post (Atom)
2 Kommentare:
பிரான்ஸ் நாட்டின் சட்ட தத்துவம் இந்திய நாட்டு சட்ட தத்துவத்திற்கு மாறானது. "ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கபடவில்லை என்றாலும் பரவாயில்லை, ஒரு நிரபராதி தண்டிக்கபடக் கூடாது." ஆனால் பிரான்ஸ் நாட்டு சட்ட தத்துவம் இதற்கு நேர்மாறனது. குற்றவாளி என்பவர் தண்டிக்கப்பட வேண்டும்.
வெளிகண்டநாதர்
"ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கபடவில்லை என்றாலும் பரவாயில்லை.
ஒரு நிரபராதி தண்டிக்கபடக் கூடாது."
அதை நான் வரவேற்கிறேன்.
குற்றவாளி என்பவர் தண்டிக்கப்பட வேண்டும்.
குற்றவாளி தண்டிக்கப் படுவது எதற்காக...?
அதற்கான பலன் ஒரு வாயில்லா ஜீவனுக்குத் தண்டனை கொடுப்பதன் மூலம் கிடைக்குமா?
Kommentar veröffentlichen