Dienstag, Mai 17, 2005

அடையாளமா...? தொலைத்தாரா...?

2000 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு தோற்சப்பாத்தை தென்மேற்கு பிரித்தானியாவில் உள்ள ஒரு சுரங்கப்பள்ளத்துக்குள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். கிட்டத்தட்ட 30cm நீளமான, அதாவது தற்போதைய ஐரோப்பிய அளவில் 43-44 அளவுகளைக் கொண்ட இச்சப்பாத்து கிட்டத்தட்ட தற்போதைய சப்பாத்துக்கள் போலவே தைக்கப் பட்டு நூல் போட்டுக் கட்டுவதற்கான ஓட்டைகளுடன் காணப் படுகின்றது.

சுரங்கப்பள்ளத்துகள் தண்ணீர் நிறைந்திருந்த காரணத்தால் கிறிஸ்துவுக்கு முன் 700ம் ஆண்டிலிருந்து கிறிஸ்துவுக்குப் பின் 43ம் ஆண்டுக்குள்ளான காலத்தான என நம்பப் படுகின்ற சுரங்கப்பள்ளத்துள் இருந்த மரப்பொந்துக்குள் காணப்பட்ட இச்சப்பாத்து இன்னும் பழுதடையாமலே இருக்கிறது.

இச் சப்பாத்து ஒரு அடையாளமாக அம் மரப்பொந்தினுள் வைக்கப் பட்டதா அல்லது சப்பாத்துக்குரியவர் சேற்றிலே வழுக்கியதில் அச் சப்பாத்தைத் தொலைத்தாரா என்பது தெரியவில்லை.

3 Kommentare:

Muthu hat gesagt…

பாருங்கள் அங்கே ஆயிரமாண்டு செருப்பை இவ்வளவு கவனமாய் ஆராய்கிறார்கள். நம்மூரில் 10,000 வருட பழமையான எத்தனையோ பொருட்கள் கவனிப்பாரின்றி இன்னும் இருளில் கிடக்கின்றன.

Chandravathanaa hat gesagt…

சரியாகச் சொன்னீர்கள் முத்து.

Chandravathanaa hat gesagt…

இதே போலத்தான் உயிர்கள் மீதான பாதுகாப்புக்களும்.
எப்படி ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்கலாம் எனச் சில நாடுகள் யோசிக்கின்றன. சில நாடுகளிலோ மரணமும் வதையும் மலிந்து கிடக்கின்றது.

கடந்த மாதம் கை துண்டாக வெட்டப் பட்ட இலங்கைத் தமிழரை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சொன்று கையைப் பொருத்தினார்கள். இப்போது அவர் கை இயங்குகிறது. அது இங்கே ஜேர்மனியில்.

ஆனால் எமது நாடுகளிலோ வெட்டுவதும் கொத்துவதும் மட்டுமல்லாமல் உயிர்கள் கூடத் துச்சமாக மதிக்கப் படுகின்றன.