நாள் முழுவதும் தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுப்பதால் அது சோர்வடைந்து விட, அதனால் தூக்கம் வந்து விடுகிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
அப்படியல்ல. ஒவ்வொரு நாளும் இரவு சோர்வாக இருக்கும் போது வேண்டுமானால் தூங்கலாம். மனது வைத்தால் விடிய விடிய விழித்திருக்கவும் முடியும். எனவே சோர்வடைவதால் நாம் தூங்க வில்லை. சோர்வடையாமல் இருக்கத்தான் தூங்குகிறோம்.
தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ள விஞ்ஞானிகள் வித்தியாசமானதொரு சோதனையை நடாத்தியிருக்கிறார்கள்.
200 மணி நேரம் ஒருவரைத் தொடர்ந்து விழித்திருக்கச் சொன்னார்கள். அதன் காரணமாக அவர் உடலில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்ந்தார்கள். இதன் பிறகு பன்னிரண்டு மணி நேரம் மட்டுமே இவர் தொடர்ந்து தூங்கியவுடன் 200மணி நேரம் கண்விழித்த காரணத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் எல்லாம் போய் உற்சாகமாகக் காணப்பட்டதைக் கண்டு பிடித்தார்கள்.
அடுத்து அதே பரிசோதனை ஒரு நாய்க்கும் செய்து பார்க்கப்பட்டது.
200 மணிநேரம் நாய் விழித்திருந்த போது நாயின் உடலைச் சோதனையிட்டதில் விஷக்கிருமிகள் வெளியேற்றும் ஒருவிதக் கழிவுப் பொருள் நாயின் இரத்தத்தில் பரவியது கண்டு பிடிக்கப் பட்டது. இந்தக் கழிவுப் பொருள் இரத்தத்தில் அதிகமானால் மூளையைப் பெருமளவு பாதித்து உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது. இந்தச் சோதனையை ஒரு கட்டத்தில் நிறுத்தி நாயை நன்றாகத் தூங்க விட்டால் ஆபத்து நீங்கி விடுவதும் கண்டு பிடிக்கப்பட்டது.
nantri - 101 Remedies for sound Restful Relaxation
Samstag, Oktober 04, 2003
Abonnieren
Kommentare zum Post (Atom)
Keine Kommentare:
Kommentar veröffentlichen